ஓம் எனும் பிரணவ மந்திரம், அ + உ + ம் என்ற எழுத்துக்களின் இணைப்பே. இதில் 'அ' என்பது |
திதிகள் |
திருமாலின் பத்து அவதாரங்கள் 1. மச்ச அவதாரம் கோமுகன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடி விழுங்கிவிட்டு மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அவனை கண்டுப்பிடித்து வதைக்க திருமால் மேற்கொண்டதே மச்ச அவதாரம். 2. கூர்ம அவதாரம் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற மந்தார மலையை மத்தாகப் பயன் படுத்தியபோது, அதற்கு முட்டுக் கொடுக்க திருமால் மேற்கொண்ட ஆமை அவதாரம். 3. வராக அவதாரம் இரண்யாட்சன் என்னும் அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளிக்க முயன்ற போது, அதை மீட்க திருமால் மேற்கொண்ட பன்றி அவதாரம். 4. நரசிம்ம அவதாரம் பக்தன் பிரகலாதனை காத்து ரட்சிக்கவும், பிரகலாதனின் தந்தை இரணியகசிபுவை சிட்சிக்கவும் திருமால் மேற்கொண்ட அவதாரம். உடல் மனிதனாகவும், தலை சிங்கமாகவும் தோன்றிய அவதாரம். மேலே உள்ள நான்கு அவதாரங்களிலும் திருமாலுக்குப் பெற்றோர் கிடையாது. 5. வாமன அவதாரம் காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால் வதை செய்வது வாமன அவதாரம். 6. பரசுராம அவதாரம் ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட அவதாரம் இது. 7. இராம அவதாரம் அயோத்தி மன்னன் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாய் பிறந்து, சீதையை மணம் முடித்து, இராவணனையும் இதர அரக்கர்களையும் கொல்வதற்கு எடுத்த அவதாரம். 8. பல பத்திரர் அவதாரம் பல பத்திரர் கிருஷ்ணனின் ஒன்று விட்ட சகோதரர் உறவு முறை. இவருடைய தந்தைப் பெயர் வசுதேவர். அவருக்கு தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர் உண்டு. பல பத்திரர் அவதாரம் பிரலம்பன் என்கிற அரக்கனை அழிக்க நேர்ந்த அவதாரம். 9. கிருஷ்ண அவதாரம் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாய்ப் பிறந்து, பாரதப் போரை நடத்தி, உலகத்திற்குத் தேவையான கீதாபதேசம் செய்த அவதாரம். 10. கல்கி அவதாரம் உலகை அழித்துப் புது உலகினைப் படைப்பதற்காக திருமால் மேற்கொள்ளவிருக்கிற அவதாரம் இன்னும் நிகழவில்லை. |
ஆய கலைகள் அறுபத்தி நான்கு 1) அக்கர இலக்கணம் - மொழி உச்சரிப்பு, படிக்கும் முறை 2) இலிகிதம் - எழுதும் முறை பற்றிய படிப்பு 3) கணிதம் - எண்கள் பற்றிய படிப்பு 4) வேதம் - வேதங்கள். சட்டங்கள் பற்றிய படிப்பு 5) புராணம் - புராணங்கள் படிப்பது பற்றிய கலை 6) வியாகரணம் - இலக்கணம் பற்றிய படிப்பு 7) நீதி சாஸ்திரம் - நீதியை பரிபாலனம் செய்யும் முறை 8) சோதிட சாஸ்திரம் - சோதிடக் கலை 9) தர்ம சாஸ்திரம் - தர்ம வழிகளைப் போதிப்பது 10) யோக சாஸ்திரம் 11) மந்திர சாஸ்திரம் 12) சகுன சாஸ்திரம் 13) சிற்ப சாஸ்திரம் 14) வைத்திய சாஸ்திரம் 15) உருவ சாஸ்திரம் 16) இதிகாசம் 17) காவியம் 18) அலங்காரம் 19) நடிப்புக் கலை 20) நாடகம் 21) நடனம் 22) சத்தப்பிரம்மம் - ஒலி பற்றிய படிப்பு 23) வீணை 24) வேணு - புல்லாங்குழல் 25) மிருதங்கம் 26) தாளம் 27) சத்திரப் பரீட்சை 28) கனக பரீட்சை 29) ரதப் பரீட்சை 30) கசப் பரீட்சை - யானைகளை தேர்வு செய்வது 31) அசுவப் பரீட்சை - குதிரைகளை தேர்வு செய்வ்து 32) இரத்தினப் பரீட்சை 33) பூமி பரீட்சை 34) இராணுவக் கலை - போர்த் தந்திரம் 35) மல்யுத்தம் 36) ஆகருடனம் - மற்றவர்களை கேட்க செய்யும் கலை 37) உச்சாடனம் - மந்திரங்களை சரிவர உச்சரிக்கும் கலை 38) வித்துவேடனம் - வசியமான பேச்சுகளால் மற்றவர்களை வசியப் படுத்தும் கலை 39) மதன சாஸ்திரம் 40) வசீகரணம் 41) மோகனம் 42) இரச வாதம் 43) காந்தர்வ வாதம் 44) பைபீல வாதம் - பிராணிகளின் பாஷையை கற்றல் 45) கவுத்துக வாதம் - கவலைப் படுவோரை மகிழ்வித்தல் 46) தாதுவாதம் - நாடித்துடிப்பை ஆராய்தல் 47) காரூடம் - விஷத்தை மந்திரத்தால் இறக்குதல் 48) நட்டம் - இழந்த பொருளை கண்டுப்பிடித்து மீட்டுத் தருதல் 49) முட்டி - கைகுள் ஒளித்து வைத்திருக்கும் பொருளை கண்டுப்பிடித்தல் 50) ஆகாயப் பிரவேசம் - காற்றில் கலந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைதல் 51) ஆகாய கமனம் - காற்றில் நடத்தல் 52) பரகாய பிரவேசம் - கூடு விட்டு கூடு பாயும் கலை 53) அதிரிசயம் - மற்றவர்கள் கண்ணுகுத் தெரியாமல் மறைந்து போதல் 54) இந்திர ஜாலம் - பிறர் அதிசயத்தக்க வித்தைகள் புரிதல் 55) மகேந்திர ஜாலம் - ஆகாயத்திலும் பூமியிலும் அற்புதங்கள் நிகழ்த்துதல் 56) அக்னி ஸ்தம்பம் - நெருப்பின் சக்தியை கட்டுப்படுத்துதல் 57) ஜல ஸ்தம்பம் - நீரின் மீது நடத்தல் 58) வாயு ஸ்தம்பம் - காற்றின் சக்தியை கட்டுப்படுத்துதல் 59) திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு வித்தை 60) வாக்கு ஸ்தம்பம் 61) சுக்கில ஸ்தம்பம் - விந்தினை கட்டுப்படுத்துதல் 62) கன்ன ஸ்தம்பம் - ஒளித்தப் பொருளை கண்டுப்பிடிக்கமுடியாமல் செய்தல் 63) கட்க ஸ்தம்பம் - கத்திப் போன்ற ஆயுதங்க்களை செயலற்றுப் போகச் செய்தல் 64) அவஸ்தைப் பிரயோகம் - ஆத்மாவை விருப்பமான ஐந்து நிலைகளில் நிறுத்துவது |
ஆன்மிக செய்திகள்
ஆன்மிக செய்திகள்
புதிய நூல்
என்னைப் பற்றி
எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன். தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.
தொடர்பு கொள்ள
இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net