ஐயப்பா ஐயப்பா
ஐயம் தீர்க்கும் ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா
ஐம்புலன் அடக்கிடும் ஐயப்பா
அரிகர சுதனே ஐயப்பா
அரவணைப் பிரியனே ஐயப்பா
அறிவின் சுடரே ஐயப்பா
அறியாமை நீக்கிடும் ஐயப்பா
அரண்மணை துறந்த ஐயப்பா
ஆரண்ய வாசா ஐயப்பா
ஆதிபகவனே ஐயப்பா
அகந்தை அழித்திடும் ஐயப்பா
எளிமை விரும்பியே ஐயப்பா
எளியோர்க் குதவும் ஐயப்பா
சபரி கிரி வாழ் ஐயப்பா
சத்திய ஜோதியே ஐயப்பா
பம்பை நாயகனே ஐயப்பா
பதினெட்டுப் படிகொண்ட ஐயப்பா
மணிகண்ட நாதனே ஐயப்பா
மனம்தனில் வாழும் ஐயப்பா
வரங்கள் தந்திடும் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா!
உன்
திருமுகம் காண ஐயப்பா - கடும்
விரதங்கள் இருந்தோம் ஐயப்பா - உன்
திருவடி தொழுதிட ஐயப்பா
இருமுடி சுமந்தோம் ஐயப்பா,
சுவாமியே ஐயப்பா
ஐயப்பா சுவாமியே
சுவாமியே ஐயப்பா
ஐயப்பா சுவாமியே!
கடும்பனி கூட ஐயப்பா - உன்
கருணையால் வெப்பம் தருதப்பா
கொடும் பிணி கூட ஐயப்பா
உனை தொழுதிட மறையுதே மெய்யப்பா, …(சுவாமியே)
மாலையணிந்த பின் ஐயப்பா - இறு
மாப்பு தொலைந்ததே ஐயப்பா - உன்
பேரைச் (பெயரை) சொன்னபின் ஐயப்பா
மன அழுக்கும் அகலுதே ஐயப்பா, …(சுவாமியே)
புலிமேல் அமர்ந்த ஐயப்பா
புவிதனைக் காக்கும் ஐயப்பா - உன்
எழில்தனைக் காண ஐயப்பா - இரு
விழி போதா தய்யப்பா, …(சுவாமியே)
நெய்யபிஷேகம் ஐயப்பா
தெய்வீக வாசம் தருதப்பா - உனைக்
கைத்தொழும் போது ஐயப்பா
மெய் சிலிர்த்தோமே ஐயப்பா, …(சுவாமியே)
அடர்ந்த காட்டினில் ஐயப்பா
நடந்து வருகையில் ஐயப்பா
சரண கோஷமே ஐயப்பா
வழித்துணையாகும் ஐயப்பா, …(சுவாமியே)
அல்லும் பகலும் ஐயப்பா - எனச்
சொல்லும் போது ஐயப்பா
கல்லும் முள்ளும் ஐயப்பா - தரும்
காயம் கூட பொய்யப்பா, …(சுவாமியே)
நெடுந்தூரம் பயணம் செய்தப்பா
சபரியை அடைந்தோம் ஐயப்பா
கடுந்துயர் கூட ஐயப்பா
சடுதியில் மறைந்திடும் ஐயப்பா, …(சுவாமியே)
பம்பையில் குளித்ததும் ஐயப்பா
பயமது விலகிடும் ஐயப்பா
கங்கையில் குளித்த பலன் தருமே
கண்கூடாய் கண்டோம் ஐயப்பா, …(சுவாமியே)
உடலோடு உள்ளமும் ஐயப்பா
சுத்தமானதே ஐயப்பா - தினம்
இதுபோல வாழ்ந்திட ஐயப்பா
சித்தம் தெளிந்தது ஐயப்பா, …(சுவாமியே)
சபரியில் குடிகொண்ட ஐயப்பா
சகலரும் வணங்கிடும் ஐயப்பா
சாந்த சொரூபி ஐயப்பா
சமத்துவம் விளக்கும் ஐயப்பா, …(சுவாமியே)
உன்
ஆலயம் அடைந்தால் ஐயப்பா - அகம்
ஆனந்தம் அடையும் ஐயப்பா - உன்
பாதம் பணிகையில் ஐயப்பா
ஆணவம் அழிந்திடும் ஐயப்பா, …(சுவாமியே)
நோயின்றி வாழ்ந்திட ஐயப்பா
தூய்மை உணர்த்தினாய் ஐயப்பா
ஓய்வின்றி உழைத்திட ஐயப்பா - மலை
ஏறிட வைத்தாய் ஐயப்பா, …(சுவாமியே)
சாதிபேதம் இல்லையப்பா - உன்
சந்நிதானத்தில் ஐயப்பா - மகர
ஜோதி காண்கையில் ஐயப்பா - உன்
மகத்துவம் புரிந்திடும் ஐயப்பா, …(சுவாமியே)
காடு மேடுகள் பல நடந்து - காட்டு
விலங்குகள் அதைக் கடந்து - கட்டுப்
பாடு அதனைக் கடைப்பிடித்து - உனைக்
காண வந்தோமே ஐயப்பா, …(சுவாமியே)
பதினெட்டுப் படிகள் தனில் ஏறி - உன்
பாதம் தொழுகையில் ஐயப்பா
படிப் படியாக முன்னேற - நல்ல
பாடம் சொல்லித் தருதப்பா …(சுவாமியே)
பிழைகள் செய்ததை மன்னித்து - எங்கள்
பாவம் தீர்த்திடு ஐயப்பா
மறுபடி காண வருவோமே - உன்மேல்
பாசம் கொண்டு தான் ஐயப்பா, …(சுவாமியே)
மனமறிந்து தவறுகள் செய்யாமல்
வாழ்ந்திட துணைபுரி ஐயப்பா
மனமறிந்து தவறு செய்தாலோ - உனை
வணங்கிட தகுதி இல்லையப்பா! …(சுவாமியே)
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சபரி சாஸ்தாவே ஐயப்பா!!!
சுவாமியே ஐயப்பா
ஐயப்பா சுவாமியே
சுவாமியே ஐயப்பா
ஐயப்பா சுவாமியே!
பக்தியுடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.