தானா சேர்ந்தக் கூட்டமடா - இது
தமிழகம் கண்ட மாற்றமடா
காணா போகுது கழகமெல்லாம் - கண்ட
கனவு நிஜமா ஆகுதடா!
தாமரை மலரப் போகுதிங்கே
தமிழகம் வளரப் போகுதடா
இராமரைப் பழிச்சக் கூட்டமெல்லாம் - இனி
இராமரைக் கும்பிட ஓடுமடா!
தங்கள் வீட்டுப் பிள்ளையென
தமிழகம் காக்கும் தலைவனென
சிங்கத் தமிழன் நடை போட
சிலிர்த்து உள்ளங்கள் மகிழுதடா!
ஆடு ஆடு என்றவர் பாடு
ஐயோ சிரிப்பா சிரிக்குதடா
ஆடல்ல இதுவொரு அரிமா என்று
அறிந்தபின் ஓடி ஒளியுதடா!
உழைப்பால் உயர்ந்த உத்தமனாம் - நல்ல
உழவன் மகன் குணம் தங்கமடா
பிழைப்பிற்காக பிறர் காலில் விழாத - ஒரு
தலைவனாம் தங்கத் தமிழனடா!
தன்னந்தனியாய் வந்தவர் பின்னே
தமிழகம் போடுது வெற்றி நடை
அண்ணன் காட்டிய வழியில் செல்ல
அணியணியாய் திரளுது இளைஞர் படை!
இவர்
மோடி என்ற மாமனிதர் - கண்டு
பிடித்துக் கொடுத்த நல் முத்து
வாடி நின்ற தமிழகம் வளம்பெற
வரமாய்க் கிடைத்தப் பெரும் சொத்து!
அதிகாரம் செய்ய வாய்ப்பிருந்தும்
சமுதாய சேவை புரிந்திடவே
அரிதாரம் ஏதும் பூசாது வந்த - ஓர்
அழகிய தமிழ் மகன் இவர்தானடா!
சினிமா கவர்ச்சி ஏதுமின்றி
மனிதர்கள் மனதில் இடம்பிடித்தார்
பணியாள் பணபலம் ஏதுமின்றி
தனியாய் வந்து துணிந்து நின்றார்!
பிரித்து வைத்துக் குளிர் காயும்
திருட்டுக் கூட்டத்தை விரட்டிடவே - ஆர்ப்
பரித்து வந்த ஓர் இளைஞனடா - கண்டு
மிரட்டும் கூட்டம் மிரளுதடா!
கூலிக்குத் திட்டியக் கூட்டமெல்லாம் - இந்த
காவலன் கர்ஜனைக் கேட்ட பின்னே - இவரைக்
கேலி செய்து ஒழித்திடலாம் - என்ற
கேவல எண்ணத்தை மறந்து நடுங்குதடா!
காவல் துறை உயர் அதிகாரி
களை எடுக்க வந்த விவசாயி
தூய்மை ஆகட்டும் தமிழ்நாடு
துணை நிற்போம் என்றும் இவரோடு!
பாமரர் முதல் படித்தவர் வரை
யாவரும் விரும்பும் இனியவர் தான்
தாமரை மலர தமிழகம் நிமிர
ஆளப் போவது இனி அவர் தான்!
மோடி கரத்தை வலுப்படுத்த - கடைக்
கோடித் தமிழரின் மனங்கவர்ந்து
மூடிய விழிகளை திறக்க வைத்த
கோடியில் ஒருவன் வழி செல்லடா!
தம்பி என்று பாசம் வைத்து
அண்ணா என்று அன்பு வைத்து
நம்பி வந்தோர் வாழ்வின் இருள் விலக
அண்ணாமலை தீபம் இன்று ஒளிருதடா!
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.