உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு
நம் தமிழின் சிறப்பை
இரு இரு, சிறு சிறு சொற்கள் கொண்டு
இயற்றிய ஒரு குறு சுறுசுறு கவிதை
இதோ...
தமிழ்,
என் மொழி
தென் மொழி
தேன் மொழி!
அது
இன் மொழி
தொன் மொழி
மாண் மொழி!
நம்
மண் மொழி
மென் மொழி
மேன் மொழி!
அது
முன் மொழி
மன் மொழி - பெரு
மான் மொழி!
என்றும்
நன் மொழி
நுண் மொழி - சான்
றோன் மொழி!
இறை-
வன் மொழி
வண் மொழி - மூத்
தோன் மொழி!
இளைய
பெண் மொழி
பொன் மொழி - உள்ளம்
பேண் மொழி!
அது
பன் மொழி
பண் மொழி - மயக்கும்
பாண் மொழி!
தமிழ் என்றும்
நம் மொழி
செம் மொழி - அழியா
தேம் மொழி!!!
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.
மன் | அரசன்; வீரன்; தலைவன் |
மாண் | மாட்சிமை |
முன் | பழைமை; முதல் |
பெருமான் | கடவுள்; அரசன்; பெருமையிற் சிறந்தவன் |
வண் | வளம்; செழிப்பு; மிகுதி |
பேண் | பாதுகாப்பு |
பண் | இசை |
பாண் | இசைப்பாட்டு |
தேம் | இனிமை; தேன் |